மிட்டாய் பொங்கல்
மீண்டும் ஒரு சுழற்சி, கருப்பட்டி கடலை மிட்டாய் ஆரம்பித்து நன்றாக போய் கொண்டு இருந்த சமயம் தும்பியின் குழந்தைகள் நிகழ்வு மதுரையில் நடத்த திட்டமிட்ட போது நம்ம சின்ன வயசுல சாப்பிட்ட மிட்டாயை எல்லாம் ஒரு கண்ணாடி பாட்டில்ல போட்டு நிகழ்ச்சி வர்ற குழந்தைகளுக்கு எல்லாம் கொடுக்கலாம் அப்படின்னு ஒரு யோசனை.
உண்மையில் கடலை மிட்டாய் தயாரிப்புக்காக அலைந்து திரிந்த சமயத்தில் அகிலா,ஆங்கில நாளிதழில் வந்து இருந்த ஒரு கட்டுரையின் இணைப்பினை அனுப்பி வச்சு இருந்தாங்க.அதுல பழைய மிட்டாய்கள் பத்தியும் அதோட தயாரிப்பு இன்னும் பல விசயங்கள் கொடுத்து இருந்தாங்க.அதுல மதுரை மிட்டாய்கடை சந்துன்னு வந்த வார்த்தை மண்டைக்குள்ள ஆழமா பதிஞ்சுருச்சு.அப்பாவும்,நானும் அந்த வீதியை பார்க்க வந்து இருந்தோம்.அப்பாவுக்கு மதுரையோட எல்லா சந்து பொந்தும் நல்லா தெரியும் நடந்தே மதுரையை பல முறை சுத்தி இருக்காரு.அதனால் அப்பா தான் கூட வந்தாங்க.உண்மையில அதிசயமா தான் இருந்துச்சு அப்படி ஒரு ஏரியா யோசிச்சே பார்க்க முடியல நான் சின்ன வயசுல வாங்கி சாப்பிட்ட அத்தனை மிட்டாயும் அப்படியே அங்க கொட்டி கிடக்கு,வாய்ப்பே இல்லை..
அப்புறம் கண்ணாடி பாட்டில் மதுரையை சுத்துன கழுதை எங்கேயும் போகாது அப்படின்னு ஒரு வார்த்தை சொல்லுவாங்க.பூபாளன் மதுரையை அவரு மாதிரி அணு அணுவா தெரிஞ்சவங்கல நான் பார்க்கல அவரும் ஸ்ரீதர் தோழரும் தான் அழைஞ்சு திரிஞ்சு வாங்கி கொடுத்தவங்க.உண்மையில நான் பலருக்கு நான் கடன் பட்டவன் அவ்வளவு உதவிகள் நண்பர்கள் செஞ்சு இருக்காங்க.இந்த இரண்டு வருசம் போனதே தெரியல
அப்ப துவங்குன வேலை குழந்தைகள் நிகழ்வு ,பூபாளன் கல்யாணம் இப்படி ஒவ்வொரு நிகழ்ச்சியிலையும் மிட்டாய் பாட்டில் பத்து பதின்ஞ்சி வச்சுருவோம்.காசுலாம் இல்ல யார் வேணும்னாலும் எவ்வளவு வேணுனாலும் எடுத்து சாப்பிடலாம்.குழந்தைங்களை விட பெரியவங்க தான் அதிகமா வெக்கப்பட்டு கிட்டே சாப்பிடுவாங்க.மனசுக்கு அவ்வளவு சந்தோசமா இருக்கும்.
மதுரையை சுத்தி இருக்க அத்தனை கிராமத்து ஜனங்களும் முனுச்சாலை ரோட்டுல இருக்க இந்த மொத்த விலை மிட்டாய்கடைகள்ல தான் வந்து வாங்கிட்டு போறாங்க.சாயந்திரம் ஆறு மணியிலிருந்து அதிகாலை வரைக்கும் வியாபாரம் நடக்குது.தேன் மிட்டாய்,கம்மர் கட்டு,எள்ளு உருண்டை,புளிப்பு மிட்டாய்,இலந்த வடை,இனிப்பு மாவு,தேங்காய் பர்பி(வெல்லம்,சீனி),கடலை உருண்டை,கொக்கோ மிட்டாய்,பேப்பர் தோசை,பரிசு அட்டை,வில் அம்பு,டிக் டிக் இப்படி அத்தனையும் அப்படியே கிடைக்குது.
இந்த வாரம் நம்ம ஊரு இனிப்புகளோட கலவையா ஒரு பொங்கள் பரிசு தயார் பண்ண சொல்லி அண்ணன் கேட்டாரு.ஏனோ என்ன அறியாம ரொம்ப ஆர்வம் ஆயிட்டேன்.இரண்டு மூனு நாளா முழு நேரமா மிட்டாய்களை தயாரிக்கறவங்களை தேடிக் கண்டுபிடிச்சு அந்த நாள்ல சாப்பிட்ட அதே தரம்.பக்குவத்தோட தயாரிச்சோம்..உண்மையில் இந்த தொழில்களை நம்பி பிழைக்கிறவங்களை பார்த்து அவங்க கூட இருந்து பார்த்தேன்.அவங்க நிகரில்லாத உழைப்பை, அந்த தொழிலுக்கு உண்மையா இருக்குறது,சுறுசுறுப்பு எளிமை பெரிய லாபத்தை எல்லாம் பார்க்காம அந்த அடுப்புக்குள்ள வெந்து கிடக்குறாங்க.இதை வாங்கி விக்கிறவங்க வாங்கிட்டு போற சின்ன சின்ன வியாபாரிங்க இவங்களோட உலகம் ரொம்ப சின்னது.நம்ம நாக்குல ஊர்ற துளி இனிப்புகாக அத்தனை குடும்பம் முழுசும் அவ்வளவு பெரிய பங்களிப்பை தர்றாங்க.அழுக்கு படிஞ்ச பனியனும்,கைலியோட நாளைய பத்துன கவலையோட நிக்கிற இந்த மிட்டாய் தொழில்காரங்களோட வாழ்க்கை எனக்கு பல புதிய திறப்புகளை கொடுத்து இருக்கு.
ட்ரை சைக்கிள் ஓட்டுற அண்ணன்,மிட்டாய் கவர் ஒட்டுற அக்கா,பண்டல் போடுற வயசுப் பசுங்க எல்லார் முகத்துலேயும் ஏதோ ஒரு நிறைவு இருக்கு.இந்த ஒரு வார உழைப்பும் அதன் பலனா கிடைச்ச ஏழு வகை மிட்டாய்கள் அப்புறமா கருப்பட்டி கடலை மிட்டாய் இது எல்லாத்தையும் கலந்து பரிசு பெட்டியா தயாரிச்சு பொங்கள் பரிசா கொடுத்தோம்.
மிட்டாய் பரிசு போய் சேர்ந்த இடங்களில் எல்லாம் சின்ன வயசு ஞாபகம் வந்து சேர்ந்த்தாய் தகவல் வர களைப்பு எல்லாம் நீங்கி அத்தனை நீங்கி மனம் சந்தோசம் கொண்டது…
உண்மையில் இந்த பொங்கல் எங்களுக்கு மிட்டாய் பொங்கலா தான் பிறந்திருக்கு…