ஒரு நல்ல தின்பண்டத்தை எவ்வளவுக்கு எவ்வளவு சீரழிக்க முடியுமோ அவ்வளவு சீரழிச்சு அடுத்த தடவை சாப்பிடுகிற ஆசையே போகிற அளவுக்கு போயிடுது.தரமா,ருசியா செஞ்சா நாலு காசு பார்க்க முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு இருக்காங்க.அதைத் தாண்டி ரெண்டு மூனு தலைமுறையா அதே சுவையோட செய்ற ஆட்களும் உண்டு.
ஆனா ஒன்னு தெளிவா தெரியுது ,அதோட சுவை குறைஞ்சு போச்சு,நிறம் மாறிப் போச்சு,விலை கூடியும் ஆரோக்கியம் குறைஞ்சும் போயிடுச்சு.குடிசை தொழிலா இருந்து பல குடும்பத்தோட வாழ்க்கை நிலைமையை காப்பாத்துன தொழில்,இன்னைக்கு பெரிய கம்பெனி மற்றும் முதலாளிகளோட கைகளுக்கு மாறிக்கிட்டு இருக்கு.இந்த தொழில் மூலமா வீடு வாசல் குழந்தைகளோட படிப்புன்னு அத்தனை தேவைகளை நிறைவேத்திக்கிட்ட ஒரு தலைமுறை அடுத்த தலை முறைக்கு இதை கை மாத்தி கொடுக்கலை அல்லது கொடுக்க முடியல.மூலப் பொருட்களோட விலைவாசி ஏற்றம்,கலாச்சார மாற்றம்,வெளி மாநிலங்களுக்கும் ,வெளி நாடுகளுக்கும் அதிக அளவில முதல் தரமா ஏற்றுமதி செஞ்சு பணம் சம்பாதிக்கிராதுன்னு பல பிரச்சனைகள் நடை முறையில இருக்கு.ஆரோக்கியமான ஒரு தின்பண்டத்தை நம்ம பிள்ளைகளுக்கு அறிமுகப்படுத்த மறந்ததால தான் இன்னைக்கு வரைக்கும் பிறந்த நாளைக்கு கூட நம்மலால சாக்லேட்டை தவிர்த்துட்டு கடலை மிட்டாயை கொடுக்க முடியாம இருக்கோம்.
காக்கா கடி கடிச்சு நண்பனோட பகிர்ந்து கிட்ட கடலை மிட்டாயை மறுபடியும் அதே பிரியத்தோட ஆரோக்கியத்தோடா கொடுக்க ஆசை,அதற்கான ஒரு முயற்சி தான் இது.