” சின்ன வயசுல இருந்தே சாப்பிட்டதுக்கு அப்பறமா இரண்டு கடலை மிட்டாய் சாப்பிடுறது பழக்கமாவே இருந்துட்டு இருக்கு,அது செரிமானத்துக்கு ரொம்ப உதவியா இருக்குய்யா ”
உண்மையும்,எளிமையும் ஒருங்கே கூடிய மக்கள் தலைவர்,91 வயதிலும் சளைக்காமல் பயணிக்கும் தோழர்.நல்ல கண்ணு அய்யாவின் வார்த்தைகள் தான் இது.
கருப்பட்டி கடலை மிட்டாயின் உற்பத்தி துவங்கிய மூன்று மாதத்தில் பல விதமான அன்பவங்களையும் வாழ்த்துகளையும் பெற்றுள்ளோம்,குழந்தைகள்,வயசானவங்க,அக்காக்கள்,திருநங்கைகள்,அம்மாக்கள்னு எத்தனையோ முகம் தெரியாத மக்களுடன் உறவாட வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்து இருக்கு.
தொழில் முறையா ஒரு விஷயத்தை செய்யும் போது,ஏற்படும் அடிப்படை இடர்பாடுகள்,தயக்கங்கள் என பலவற்றையும் கடந்து போக பேருதவியாய் இருக்கும் நண்பர்களை நன்றியுடன் நினைத்துப் பார்கின்றோம் .
எளிய மக்களின் இந்த தின்பண்டம் அனைத்து தரப்பு மக்களையும் சென்றடைய தனி வில்லைகளாக கிடைக்கும்..
இனி, நமது இல்லங்களின் திருமணம்,புதுமனை புகுவிழா,பிறந்த நாள் விழா போன்றவற்றில் மரபுச் சுவையான தாய்வழி “கருப்பட்டி கடலை மிட்டாய் ” நிச்சயம் உண்டு.
பள்ளிகள்,அலுவலகங்களின் சிற்றுண்டி அங்காடிகளிலும் ….
தங்களின் பெயர்களையும் தாங்கிய பிரத்தேயக வடிவமைப்புடன் கிடைக்கும்.
தொடர்புக்கு – 9994846491.