வெப்பம் தகிக்கும் இந்த இரண்டு மாசமும் வீடும் மனசும் ஊருமே வேற மாதிரி இருக்கு.ஊரில் இருந்து பெரிய அண்ணே பையன் யுவதன் வந்து இருந்தான்.அவன் கூடதான் பொழுது போனது.சித்தப்பா கடலை உருண்டை எப்படி செய்விங்க? நான் பார்க்கனும் அப்படின்னு ஆர்வமா இருந்தான்.ஊர்ல இருக்க கோயில்ல முளைப்பாரி,அதனால நிறைய குட்டிசு வீட்டுக்கு வந்து இருந்தாங்க.எல்லாரும் எங்க கூட சேர்ந்து உருண்டை உருட்ட ஆரம்பிச்சாங்க, நிறைய கேள்வி கேட்டாங்க,ரொம்ப சந்தோசமா இருந்தது.
கடலை மிட்டாய் நல்லா சாப்பிட்ட பிள்ளைங்க,எள்ளு உருண்டை ஒரு வாய் மட்டும் தான் சாப்பிட்டாங்க,அதுக்கு மேல வேணாம்னு ஓடிட்டாங்க.இன்னும் நிறைய இனிப்பு போட்டு அவங்களுக்கு பிடிச்ச மாதிரி செஞ்சு பார்க்கலாம் அப்படின்னு அம்மா சொன்னாங்க.சரி ஓய்வா இருக்கும் போது செய்யலாம்னு சொல்லிட்டு விட்டுட்டேன்.ஆனா அம்மா விடல ஒரு வாரமா நிறைய மெனக்கெட்டாங்க, நிலக்கடலை அப்புறம் வெள்ளை எள்ளு கருப்பட்டி போட்டு உரலில் இடிச்சு ஒரு உருண்டை பிடிச்சு கொடுத்தாங்க,ரொம்ப நல்லா இருந்தது,
யுவதன் ஊருக்கு போய் விட்டான்,இருந்தாலும் இந்த வாரம் கொஞ்சம் நல்ல ஓய்வு கிடைச்சது.அம்மாவும் நானும் சேர்ந்து அந்த உருண்டைய செய்ய ஆரம்பிச்சோம், அம்மாவுக்கு பெரிய அண்ணணோட பிறந்தநாள் வர்ற திங்கட்கிழமைன்னு வருதுன்னு ஞாபகப்படுத்தினேன்,ரொம்ப சந்தோசமா இன்னும் கொஞ்சம் சேர்த்தே செஞ்சு இருக்கோம்.
அப்பத்தாவும் பாட்டியும் 90வயசை கடந்துவிட்டவுங்க,அவங்களுக்கும் இதை கொடுக்கலாம் அப்படிங்கிறது தான் கூடுதல் சந்தோசம்.இந்த விடுமுறைக்காலம் எல்லோரும் அவங்க அவங்க சொந்த ஊருக்கு வந்துட்டு போகிற காலம்,ரொம்ப மனசுக்கு நிறைவான தருணங்கள்.யுவதனுக்கும் இந்த கோடை விடுமுறை அப்படி அமைஞ்சு இருக்கும் அழகர் ஆத்துல இறங்குனது மதுரையோட மொத்த முகமும் மாறினதை அவனுக்கு ஓடி ஓடி காமிச்சோம்.
ஒரு சின்ன பையனோட இப்படி இருக்கிறப்ப நம்ம இயல்பே மாறுது,அவனுக்காகவே மொபல்லை கீழே வைச்சாச்சு,நேரத்துக்கு சாப்பிட்டு தூங்கி,நடந்து ஓடி விளையாடி..நாம சொல்றது அவனுக்கு போரடிக்குதான்னு அப்ப அப்ப யோசிக்க வைக்குது,நம்ம சின்ன வயசுல நாம எப்படி இருந்தோம் அப்படின்னு நினைவுகளை யோசிச்சு பார்த்துகிறேன்.
இப்ப இருக்குற குழந்தைங்கன்னு தனியா பிரிச்சு பார்க்கலாம் முடியல,எதுவும் மாறுன மாதிரி தெரியல,நான் சின்ன வயசுல எப்படியோ அப்படியே தான் யுவதன் இருக்கான்,அவங்க தாத்தாவோட இயல்பும் அவனோடதும் ஒன்னா இருக்குறது அவன் கண்டிபிடிச்சு தாத்தாகிட்டேயே போய் மனசு விட்டு சொல்றான்.நாம சரியா இருந்தா நம்ம பிள்ளைங்களும் சரியா இருப்பாங்கன்னு யுவதன் எனக்கு சொல்லாம சொல்லிட்டு போய்ட்டான்.போகும் போது சித்தப்பா விதை எல்லாம் முளைக்க மதர் பெட் போடலாம்னு சொன்னிங்க,ஆனா செய்யல அப்படின்னு சொன்னான்.
இந்த கோடை காலத்துல கருப்பட்டி கடலை மிட்டாய் செய்றதை கேள்விபட்டு இரண்டு பேர் வந்தாங்க,சென்னையிலருந்து அந்த கடலை மிட்டாயோட அட்டை பெட்டிய வைச்சுக்கிட்டு தேடி வீட்டுக்கு வந்தவங்க அப்பா கூடவே ரொம்ப நேரம் பேசுனாங்க அவங்களுக்கும் அப்பாவோட வயசு தான் ,எங்க வீதிக்கு அடுத்த வீதில இருக்குற ஒரு குடும்பம் கனடாவில் செட்டில் ஆனவர்கள்,விகடன்ல வந்த கட்டுரை பார்த்துட்டு வந்து மனசு விட்டு ரொம்ப நேரம் பேசிட்டு மிட்டாய் வாங்கிட்டு போனாங்க .இவங்க அம்மாகூட ரொம்ப நேரம் பேசுனாங்க.
என்னோட மனசு விட்டு பேசுனது எங்க வீட்டு பப்பாளி மரம் தான்,15 அடிக்கு மேல வளர்ந்து காய்ச்சு குலுங்கிட்டு இருக்கு,காலையில இருந்து வித விதமான பறவைகள் வந்து சாப்பிட்டு போகுது.யுவதன்கிட்ட அப்பா சொன்னது, இது பறவைங்க போட்ட எச்சத்துல வளர்ந்தது அதனால இதுல காய்க்கிற பழம் எல்லாம் பறவைக்கு தான் அப்படின்னு
வீட்டுக்கு செஞ்சது போக இந்த நிலக்கடலையும் எள்ளும் சேர்த்து செஞ்ச உருண்டை 25 டப்பா இருக்கு,வேணும்கிற நண்பர்களும் சொந்தங்களும் தொடர்பு கொள்ளுங்க.
whatsapp 09994846491