உருண்டைகள் செய்யத்தொடங்கி ஒரு வருடம் கடந்து விட்டது,உண்மையில் மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.இயன்ற வரை நமது முன்னோர்கள் சாப்பிட்ட ஆரோக்கிய எளிய தின்பண்டத்தை மீண்டும் மக்களிடம் கொண்டு வந்து சேர்க்கும் முயற்சியாக இது நடந்து கொண்டு இருக்கிறது .
நிலக்கடலை,வெள்ளை எள்ளு,கருப்பு எள்ளு இந்த வரிசையில் தற்போது ஆழி விதையினையும் சேர்த்து உள்ளோம்.கிட்டத்தட்ட கடந்து ஒரு மாதத்திற்கும் மேலே இதனை கொண்டு பல விதமான உருண்டைகளை செய்து பார்த்தோம் .ஆளி விதையினை பற்றியும் அது நமது மக்களின் அன்றாட வாழ்வில் எப்படி பலவிதங்களில் பயன்படுத்த பட்டது என அறிந்து கொண்டோம்.ஆனால் இன்று நம் வீட்டில் அதன் பயன்பாடு மிக அருகிவிட்டது.
உண்மையில் ஆளி விதையினை எனக்கு விவரம் தெரிஞ்சு நானே இப்பொழுதே தான் பார்க்கிறேன் ,ஆனால் அப்பத்தாவுக்கோ பாட்டிக்கோ நல்லா தெரிஞ்சு இருக்கு.கருப்பட்டி சேர்த்து இந்த விதையினை வறுத்து ,கொஞ்சம் இடித்து உருண்டையாக பிடித்தோம்.உண்மையில் அந்த மென்சுவை எப்பொழுதும் அறிந்திராத சுவை .அத்தனை மென்மை சத்தமில்லாத இனிப்பு கருப்பட்டிக்கு வாய்த்து இருப்பது தான் அதற்கு காரணம் .
ஒரு கருப்பட்டி கிடைப்பதற்கும் எத்தனை மனித உழைப்பு தேவைப்படுகிறது என யோசித்து பார்த்தால் மிக மலைப்பாக இருக்கிறது . ஆளி விதை எந்த ஊரில் விளைகிறது என்று எனக்கு உண்மையில் தெரியவில்லை ?இணையத்தில் தேடி படித்த பொழுது அதன் பயன்பாடுகள் குறித்தே பெரிதும் எழுதப்பட்டுள்ளது .நார்சத்து மிகுந்தது இந்த வரிகள் தான் திரும்ப திரும்ப கிடைக்கிறது .ஆங்கிலத்தில் flax seed என்பதன் அர்த்தம் “மிகப் பயனுள்ளது ” என்பதாம் . .
இன்னும் ஒரு பெரிய வரம் என்னவெனில் ஆளிவிதையை கருப்பு எள் மற்றும் நிலக்கடலை இவற்றுடன் சேர்த்து பயன்படுத்தலாம் என மக்கள் சொல்ல இன்னும் சுவையும் சத்தும் கூடிச் செல்வது மகிழ்ச்சியாக உள்ளது . ஆளி விதை தனக்கென எந்த சுவையும் இல்லாமல் எவற்றுடன் சேர்கிறோமோ அதன் சுவையே அது பிரதிபளிக்கிறது .
அம்மா ,அப்பா கைகள் கூடி இந்த உருண்டையினை செய்து வைத்து உள்ளனர் .வாங்கி கொள்ளுங்கள் …
To Buy:
http://www.motherway.in/product/palmjaggery-flax…ndnut-mixed-ball/